அழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது..!! படித்ததில் பிடித்தது..!!!

💕அழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது,,,

❤️நான் காலையில் படுக்கையிலிருந்து எழும்புகிறேன். நீ நெருப்புப் புகையோடு போராடிக் கொண்டிருக்கிறாய்.

❤️நான் பல் துலக்குகிறேன். நீ பாத்திரங்களை புதுப்பிக்கிறாய்.

❤️நான் செய்தித்தாளில் செய்திகளை சேகரிக்கிறேன். நீ வீட்டில் குப்பைகளை பெருக்குகிறாய்.

❤️நான் உடலை சுத்தம் செய்கிறேன். நீ ஆடைகளின் அழுக்குகளை பிரித்துக் கொண்டிருக்கிறாய்.

❤️நான் பசியாற வயிற்றை நிரப்புகிறேன். நீ பாத்திரங்களை நீரால் நிரப்புகிறாய்.

❤️நான் அலுவலகம் கிளம்புகிறேன். நீ பிள்ளைகளை சீருடையில் அனுப்பி விட்டு என்முறைக்காக காத்திருக்கிறாய்.

❤️நான் இரவு வீடு திரும்புகிறேன். நீ இன்னும் திரும்பவில்லை சமையலறையிலிருந்து.

❤️நான் தூங்கச் செல்கிறேன். நீ கதவின் தாழ்ப்பாள்களையும், எரியும் மின்விளக்குகளையும், பிள்ளைகளின் போர்வைகளையும் சரிபார்த்து விட்டே படுக்கையில் விழுகிறாய்.

❤️ஒவ்வொரு ஞாயிறுகளும் ஒவ்வொரு பண்டிகைகளும் எங்களுக்கு ஓய்வு நாட்கள். ஆனால் உனக்கு எல்லா நாளும் வேலை நாட்கள்தான்.

❤️என் வாழ்க்கைத்தோழியே! இப்போதெல்லாம் ” நான் வேலைச்செய்கிறேன்” என்று சொல்லவே தயக்கமாக இருக்கிறது.

❤️புள்ளி விபரம் சேகரிக்க வந்த அரசு ஊழியர் உன்னிடம் கேட்டார் ” வேலைப் பார்க்கிறீர்களாம்மா?” ️உன் பதில்.. “இல்லங்க.. நான் வீட்டில சும்மாதான் இருக்கிறேன்…”

❤️மனைவியை நேசிப்போம்…. அவள் நமது இரண்டாம் தாய்….

Read Previous

Diploma தேர்ச்சி பெற்றவரா நீங்கள்?.. ரூ.38,483/- சம்பளத்தில் புதிய வேலை..!!

Read Next

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில தாவர உணவுகள் மற்றும் அவற்றின் நன்மைகளை தெரிந்து கொள்வோம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular