அழகு என்பது நமக்கு உடல் ரீதியாக அமைவது மட்டுமல்ல அது மனரீதியாகவும் இருக்க வேண்டும் மனரீதியாக எப்படி என்று நீங்கள் யோசிக்கலாம் மகிழ்ச்சியாக இருப்பதே ஒரு அழகுதான். நீங்கள் எப்போதும் சிரித்துக் கொண்டு எல்லோரிடமும் பழகிப் பாருங்களேன் நீங்கள் எப்பொழுதுமே அழகாக தெரிவீர்கள்…
மகிழ்ச்சியான இடத்தில் நாம் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள் ஆனால் அதைவிட நீங்கள் இருக்கும் இடம் அதை மகிழ்ச்சியாக்கி பாருங்கள் நீங்கள் அந்த இடத்தில் தனி அழகுடன் தெரிவீர்கள். மனிதனுக்கு முதல் அழகே மகிழ்ச்சிதான் பிறகுதான் உடல் ரீதியான அழகு நாம் இந்த பூமியில் இருக்கும் வரை எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து வாழ்க்கையை ஆனந்தமாக கொண்டு செல்ல வேண்டும் மற்றும் நமது செயல்பாடுகள் மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவதற்காக இருக்க வேண்டும் யாருடனும் சண்டை சச்சரவுகள் செய்வது கூடாது. ஆனால் ஒரு சிலரை பாருங்கள் எப்போதுமே சோக கீதம் பாடிக்கொண்டே இருப்பார்கள் வாழ்க்கையில் உண்மையான அர்த்தத்தை புரியாமல் எப்போதுமே துன்பப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அதே நேரத்தில் அடுத்த நேரத்திற்கான உணவினை தேடி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ள பறவைகளும் விலங்குகளும் கூட மகிழ்ச்சியாகவே வாழ்கின்றன ஐந்து வயது சிறுவன் ஒருநாள் தன் அம்மாவிடம் கேட்டான் அம்மா வாழ்க்கையின் ரகசியம் என்னவென்று. அம்மா சொன்னால் எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பது தான் அன்று அவன் பள்ளிக்குச் சென்றபோது ஆசிரியையை மாணவர்களை பார்த்து நீங்கள் வளர்ந்து என்ன ஆகப் போகிறீர்கள் என்று கேட்டார். ஒரு பையன் டாக்டர் என்றால் இன்னொரு பையன் இன்ஜினியர் என்றால் விதவிதமான பதில்களில் வித விதமான விருப்பங்கள் தெரிந்தது. ஆனால் அந்த சிறுவன் மட்டும் நான் மகிழ்ச்சியாக இருக்க போகிறேன் என்றான் ஆசிரியை கோபமாக உனக்கு கேள்வி புரியவில்லையா என்றால் சிறுவனோ டீச்சர் உங்களுக்கு வாழ்க்கை புரியவில்லையா என்றான் வாழ்க்கையின் அழகு என்பது நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதில்லை உங்களால் அடுத்தவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதிலேயே இருக்கிறது. மகிழ்ச்சி இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட நீங்கள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சி என்னும் நிறைய தூவிக் கொண்டு இருங்கள் உங்கள் வாழ்க்கை நிறைவானதாக இருக்கும்..!!