
இயற்கை வயகாரா என்று சொல்லக்கூடிய சோற்றுக்கற்றாழையில் கருங்காற்றாலை செங்கற்றாலை பெருங்காற்றாலை, சிறுகற்றாழை பேய் கற்றாழை மற்றும் ரயில் கற்றாழையான பல வகைகள் உள்ளன..
கற்றாழை செடிக்கு குறைந்த அளவு சூரிய ஒளி இருந்தாலே போதும் ஜன்னல் ஓரத்தில் ஜன்னல் கம்பியில் வெளிச்சம் படும் இடத்தில் வைத்தால் போதும், செடியின் அடிப்பாகத்தில் வெள்ளை நிறத்தில் மெலிதாய் ஒரு படலம் இருக்கும் அப்பகுதி வரை துண்டாய் வெட்டி 12 நாட்கள் உலர வைக்கவும், பின் அந்தத் துண்டிலிருந்து சார எடுக்கலாம் உலர்ந்த பின் மண்ணில் நட்டு வைத்தால் ஒரு வாரம் கழித்து மெலிதாய் துளிர் விட ஆரம்பிக்கும், தோட்டமண் தேங்காய் நார் மற்றும் எரு உரம் ஆகியவற்றின் கலவை இதற்கு போதுமானது. வேர்கள் ஊடுருவி நன்கு வளர மண் தளர்வாக இருக்க வேண்டும், காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சி அதிக அளவு ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும் மாலை நேரத்தில் இந்த செடிகளுக்கு மத்தியில் நடக்கலாம், சோற்றுக்கற்றாழையை பயன்படுத்தும் முன் அதை வெட்டியவுடன் சொட்டும் மஞ்சள் நீர் முழுவதுமாக வடிய விட வேண்டும், மேல் தோலை சீவி அதன் உள்ளே இருக்கும் சதைப்பகுதியை சிறு துண்டுகளாக நறுக்கி பலமுறை தண்ணீரில் கழுவ வேண்டும்..!!