“அழ வச்சதுக்கு ஒரு அவார்டா” தனக்கு கிடைத்த விருது குறித்து வடிவேலுவின் பேட்டி..!!

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக இருந்து வருபவர் வடிவேலு. இவர் 80-களில் ஆரம்பங்களில் இருந்து தற்பொழுது வரை தொடர்ந்து தனது நடிப்பின் திறமை மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.

தனது காமெடி திறமையாலும், உடல் அசைவுகளும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் திறமை உடையவர் நடிகர் வடிவேலு. இவருக்கு பின்பு தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் வந்தாலும் வடிவேலுவை போல் ஒரு காமெடி நடிகர் இல்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே உள்ளது.

இது போன்ற நிலையில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகராக ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கும் வடிவேலு. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த “மாமன்னன்”  திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் வடிவேலுவின் நடிப்பு மிக பெரும் பாராட்டை பெற்றுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான படம் மிகப்பெரும் வெற்றியை அடைந்ததை தொடர்ந்து தற்போது வடிவேலுவின் நடிப்பிற்கு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது.

அதில் பேசிய நடிகர் வடிவேலு அழவச்சதுக்கு அவார்ட் கொடுக்கறீங்க என்று காமெடியாக பேசியிருந்தார் மேலும் மாரி செல்வராஜிற்கு தான் இந்த விருந்து சேரும் என்று கூறியுள்ளார்.

Read Previous

குடிக்க பணம்தர மறுப்பு: பெற்றெடுத்த தாயை தீவைத்து, கொளுத்திய மகன்..!! பரிதாபமாக பறிபோன உயிர்.!!

Read Next

தென்னந்தோப்பில் காதலியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த பயங்கரம்: தஞ்சையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular