Oplus_131072
அவசரக்காரன்- ஒரு நகைச்சுவை கதை
*ஒரு கணவன் மனைவிக்குள் வாக்குவாதம்*….சிறிய சச்சரவு…பெரிதாகி…கடந்த மூன்று நாட்களாக இருவருக்கும் பேச்சு வார்த்தையில்லை..
இது நீடிக்கவே…எ மனைவி அவள் கணவன் எதிரில் வந்து…
நான் இப்போது 10 வரை எண்ணுவேன் ! அதற்குள் நீங்கள் பேசவில்லை என்றால்….
நான் எனது அம்மா வீட்டிற்குப் போய் விடுவேன்.
அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.. அவன் அதைத் தான் எதிர்பார்த்திருந்தான்.
அவள் எண்ணத் துவங்கினாள் …. ….
*மனைவி* – 1 … 2 … 3 …
*கணவன்* – (அமைதி) … !
*மனைவி* – 4 … 5 …
*கணவன்* – (மவுனம்)
*மனைவி* – 6 … 7…
*கணவன்* – (அவன் மனதில் மகிழ்ச்சி… ஆனாலும் அமைதி)
உச்சகட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது …
*மனைவி* – 8 … 9 …
*கணவன்* – (மனதில் எல்லையற்ற மகிழ்ச்சி …)
*மனைவி* …
(அமைதி) …
(பயங்கர மவுனம்)
…
…
பிறகு கணவனால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை.
உணர்ச்சி வயப்பட்டு கத்தினான் !
எண்ணு … எண்ணு …
*ஏன் மேற்கொண்டு எண்ணாமல் நிறுத்திவிட்டாய்*?
*Wife*- ( மிகவும் அமைதியாக)நல்ல வேளை! நீங்க பேசிட்டீங்க… இல்லைனா நான் போயிருப்பேன் …!!
கணவன் – 😗😗
*பின் குறிப்பு* …
எப்பவுமே கணவன்மார்களுக்கு அவசரம் தான். சிறிது நேரம் பொறுமையை கடைபிடித்து இருக்கலாம்.




