அவரை நேரில் பார்த்தாலே ஒரே மகிழ்ச்சிதான் – மனம் திறந்த விக்னேஷ் சிவன்..!!

தமிழ் சினிமாவில் “போடா போடி”, “நானும் ரவுடிதான்”, “தானா சேர்ந்த கூட்டம்”, “காத்து வாக்குல இரண்டு காதல்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இவர் “கூலாங்கல்” மற்றும் “நெற்றிக்கண்” ஆகிய படங்களை தயாரித்து வருகின்றார். கடந்த ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் ஆக திகழும்  தமிழகத்தில் கௌரவிக்கப்பட்டு வந்த நயன்தாராவை திருமணம் செய்து தற்பொழுது தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்குமாருடன் இணைந்து திரைப்படம் ஒன்று எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில் பின் நாட்களில் இந்த அறிவிப்பு மறுக்கப்பட்டது. இந்த நிலையில் எல்,ஜி.எம் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்காக சென்னை வந்த கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனியிடம் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் அணிந்திருந்த டி-ஷர்டில் ஆட்டோகிராப் வாங்கியுள்ளார்.

இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன் “எனது கேப்டன் எனது ரோல் மாடல், நான் நேசிக்கும் மனிதன் தோனி. அவரை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் எனது முகத்தில் மகிழ்ச்சியை காண்கின்றேன்” என்று அவர் பதிவிட்டு உள்ளார்.

Read Previous

அச்சச்சோ.. அப்பட்டமா தெரியுதே; வெள்ளை நிற உடையில் அங்கங்களை காண்பித்து கிறங்கவைத்த நடிகை.!!

Read Next

நடிகர் சல்மான்கானின் அசத்தல் யோசனை; 14 ஆண்டுகள் தவித்த நடிகை தாயான நெகிழ்ச்சி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular