
புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிரேம்ஜி. நடிகராக மட்டுமே இல்லாமல் பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார்.
பெரும்பாலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களில் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்திலேயாவது நடித்து விடுவார். கடைசியாக சத்திய சோதனை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் பிரேம்ஜி 45 வயதை தாண்டிய நிலையில் தற்போது தான் திருமணம் செய்து கொண்டார்.
திருத்தணி முருகன் கோயிலில் இந்து என்பவரை மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமண வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மிக எளிமையாக திருமணம் நடைபெற்ற நிலையில் சென்னை வந்து ரிசெப்ஷன் நடைபெறும் என்று எதிர்பார்த்து இருந்தார்கள் ஆனால் தற்போது வரை நடைபெறவில்லை.
இருவரும் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தது .திருமணத்திற்கு பிறகு பிரேம்ஜியின் மனைவி இந்து சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் பிரேம்ஜி சமைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார்.
அதில் பிரேம்ஜி வீடு துடைத்து துணி துவைத்து காயப்படும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. மேலும் அதற்கு பாடலாக ஆடிய ஆட்டம் என்ன என்ற பாடலை இணைத்திருந்தார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் மாறி மாறி அவரை கிண்டல் செய்து வருகிறார்கள். தலைவா உனக்கா இந்த நிலைமை, முரட்டு சிங்கத்துக்கு வந்த சோதனையை இது, சிங்கத்தை இப்படி உட்கார வச்சிட்டீங்களே என்ன கொடுமை சார் இது.. என்றே பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram