
அவல் போண்டா செய்வது எப்படி..?? கண்டிப்பா உங்க வீட்ல செஞ்சு பாருங்க சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க..!!
இன்றைய காலகட்டத்தில் பெரியவர்களும் சரி சிறியவர்களும் சரி வீட்டில் சமைத்த உணவுகள் என்றால் அதிக விருப்பம் எடுத்து சாப்பிட மாட்டார்கள். இதுவே ஹோட்டலில் வாங்கிய உணவு என்றால் அனைவரும் குஷியாக சாப்பிடுவார்கள். இந்நிலையில் ஹோட்டல் சுவையில் அவல் போண்டா வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு மிக்ஸியில் கால் கப் ஊற வைத்த கடலைப்பருப்பு மற்றும் ஒரு கப் ஊறவைத்த அவல் இரண்டையும் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய மிளகாய் மற்றும் நறுக்கிய இஞ்சி நறுக்கிய பூண்டு மற்றும் கொத்தமல்லி இலை பொடி பொடியாக நறுக்கியது சிறிது கருவேப்பிலை உப்பு சிறிதளவு மற்றும் ஓமம் சிறிதளவு சீரகம் சிறிதளவு மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்கவும். அடுப்பைப் பற்ற வைத்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி என்னை நன்றாக சூடான பிறகு சின்ன சின்ன போண்டா உருண்டைகளாக போட்டு மிதமான தீயில் பொரித்து எடுத்தால் சாப்பிடுவதற்கு மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும் அவல் போண்டா தயார்.