அவளின் நினைவுகளில் என் இதயம் துடிப்பது தானே காதல்…
தூரத்தில் அவள் இருந்தும் இருவருக்குள் இருக்கும் உரையாடல் குறைந்தும் அவள் நினைவு என்னை துரத்திக் கொண்டே இருக்கிறது, அந்த நினைவில் தான் மீண்டும் மீண்டும் என் காதல் பயணம் தொடர்கிறது, எங்கு முற்று பெறுகிறது என்று தெரியவில்லை ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் மூச்சுக்காற்றில் என் காதல் தொடர்கிறது என்று தெரிகிறது, என் சுவாசத்தையும் துடிதுடிக்க வைக்கிறாள் அவள் தூரச் செல்லும் பொழுது சில நேரங்களில் சுவாசம் இன்றி இதயம் துடிக்கிறது அவள் என்னருகில் நிற்கும் பொழுது, இப்படிதான் காதல் பயணிக்கிறது இதயங்களுக்குள் இதயமாக ஊடுருவி என்னவளுக்காக…!!