
ஆதாம் ஏவாள் காலம் தொடங்கி ஆதி மனிதன் காலம் நடையில் இருந்து இன்றைய காலம் வரை காதல்தான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அடித்தளமாக இருக்கிறது, அந்தக் காதலை கடந்தவர்களும் உண்டு அதே காதலை கடக்க முடியாமல் இன்று தவிப்பவர்களும் உண்டு…
இரண்டு இதயங்களுக்கு இடையில் போர்க்களம் என்ற கோர்வைக்குள் இதயங்கள் பேசிக்கொண்டு இதழ்கள் பேச மறுத்து கண் அசைவில் காரணம் இன்றி யுத்தம் செய்யும் கலவரமே காதல் ஆகும், அந்தக் காதலை மனிதனாகப் பிறந்த எவராக இருந்தாலும் ஒருமுறையாவது அதனை ருசித்திட வேண்டும் அந்த ருசியின் ஆழமும் சுவையும் பேரின்பமே கடைசி மூச்சு வரை ஒருவனை காரணம் இன்றி சிரிக்க வைப்பதும் சில காதல் நினைவுகளை அந்த நினைவுகளை இதயத்தோடு இதயமாக சுமந்து இன்பத்துக்குள் கலந்து எதிரில் இருக்கும் காதலனுக்கும் காதலிக்கும் அன்பையும் அரவணைப்பையும் ஆதரவையும் ஆசை வார்த்தைகளையும் அதனைத் தாண்டி அடிக்கடி சின்ன சின்ன பரிசுகளையும் தந்து மகிழ்விப்பதும் அதில் தன்னை மகிழ்வித்து கொள்வதும் காதலே, அந்தக் காதலை ஒரு முறையாவது உங்கள் வாழ்வில் சுவைத்து பாருங்கள் அவள் நினைவில் இருக்கும் கற்பனை காவியங்கள் மலராக மலரும், அந்த மலரில் தேனையும் சுவைக்கலாம் வண்டையும் ரசிக்கலாம்…!!