ஒவ்வொரு மாதமும் சுமார் 10 முதல் 15 தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மூன்று திரைப்படங்களுக்கு குறையாமல் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் மட்டும் 10 திரைப்படங்கள் வெளியாக இருப்பதாகவும் அதில் 8 திரைப்படங்கள் பிரபலங்களின் திரைப்படங்கள் என்பதால் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் விடுமுறையில் மட்டும் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘தங்கலான்’, கார்த்தி நடிப்பில் ஒரு உருவான ’மெய்யழகன்’ கீர்த்தி சுரேஷ் நடித்த ’ரகு தாத்தா’ ஆகிய திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.
மேலும் ஜெயம் ரவி நடித்த ’காதலிக்க நேரமில்லை’ கவின் நடித்த ’பிளடி பெக்கர்’ மற்றும் அருண் விஜய் நடித்த ‘வணங்கான்’ திரைப்படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாகியுள்ளன. அதேபோல் விஜய் ஆண்டனி நடித்த ’ஹிட்லர்’ பிரசாந்த் நடித்த ’அந்தகன்’ திரைப்படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி நகுல் நடித்த ’வாஸ்கோடகாமா’ தம்பி ராமையா நடித்த ’ராஜா கிளி’ ஆகிய படங்களும் ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன. மொத்தத்தில் ஆகஸ்ட் மாதம் அடுத்தடுத்து பிரபலங்களின் படங்கள் வெளியாக இருப்பதை அடுத்து சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.