ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி அன்று சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது, அப்படிப்பட்ட சுதந்திர திருநாளில் எத்தனையோ தியாகிகள் உயிர்த்தியாகம் செய்து நமக்கு சுதந்திரம் வாங்கி தந்த நிலையில் அவர்களை நினைவு கூறும் வகையிலும் சுதந்திரத்தை கொண்டாடும் வகையிலும் ஆகஸ்ட் 15 சுதந்திர தின நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15 சுதந்திரத் திருநாள் அன்று மதுக்கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது, டாஸ்மாக் கடையோடு இணைந்த பார் அல்லது எவரேனும் மதுபானங்களை விற்று வந்தால் அவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, மேலும் சுதந்திர திருநாளை சுதந்திரமாக கொண்டாட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது..!!