காலம் காலமாக நாம் செய்துவரும் யோகாசனத்தில் பலவகையான வகைகள் உண்டு, அவற்றில் தனுராசனத்தில் உடல் ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும் மேலும் தினம்தோறும் செய்வதன் மூலம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் உடலை ஆரோக்கியமாக வைக்கிறது என்று முனிவர்கள் கூறி உள்ளனர்..
தனுராசனத்தை செய்யும் பொழுது உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும் மேலும் உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்த ஓட்டத்தின் அளவை மேம்படுத்துகிறது, முதுகு மற்றும் உடல் தோரணியை சரி செய்து உடல் வலி முதுகு வலி மற்றும் கை கால் வலிகளை நீக்குகிறது, மேலும் நீரழிவு நோயை கட்டுக்குள் வைத்து உடலை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்கிறது, செரிமான கோளாறுகள் மற்றும் மார்பு நோய்களுக்கு சிறந்த தீர்வாக தனுராசனம் விளங்குகிறது, மேலும் தினந்தோறும் தனுராசனத்தை செய்து வருகையில் உங்களுக்கு தேவையான ஆரோக்கியம் மற்றும் முதுமையிலிருந்து நோயிலிருந்து உடலை மீட்டு பாதுகாக்கிறது, மேலும் அடிவயிற்றில் கொழுப்பு சேராமல் பாதுகாத்தும் கொழுப்பை கரைப்பதற்கும் இந்த ஆசனம் பெரிதும் உதவி புரிகிறது…!!




