
விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ரொனால்டோ மற்றும் மெஸ்சி அடுத்தபடியாக அதிக பின்தொடர்பவர்களை கொண்ட விளையாட்டு வீரர் என்ற இடத்தை பெற்றுள்ளார். ஆசியாவிலேயே இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்ற முதல் இந்திய பிரபலம் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இந்திய அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் விராட் கோலி அதிகம் ஆக்டிவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.