ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற புதிய செயலி உருவாக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் ஆசிரியர்கள் கோரிக்கைகள் பற்றி பேசினார். இதையடுத்து அவர் கூறுகையில், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற புதிய செயலி உருவாக்கப்படும் என்றும், அதில் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை பதிவிடலாம்.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அதற்கான உரிய நடவடிக்கை எடுப்பார்கள். தாமதமாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செயல்பட்டால் அது நிர்வாக குறைபாடாகவே எடுத்துக்கொள்ளப்படும். அதனால் ஆசிரியர்கள் கோரிக்கைகள் உடனடியாக கண்டறிந்து அதற்கான நடடிக்கை எடுக்கப்படும்.

மேலும் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தது முதல் அதில் இருந்து மாணவர்களை பாதுகாக்க வழக்கமான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். மழையால் பாதிக்கப்பட்ட கட்டடங்கள், மின் இணைப்பு, மின் மோட்டார் போன்றவை ஆய்வு செய்யப்படும.

தீபாவளி முடிந்தவுடன் பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்புகள் வரும். அடுத்த வருடம் ஏப்ரல் , மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் அதற்கான வேலைகளுக்கு முன்னர் பொது தேர்வு வேலைகளை முடிக்க வேண்டும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Read Previous

தமிழகத்தில் நாளை மறுநாள் தனியார் வேலை வாய்ப்பு முகாம்..!!

Read Next

ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தில் புதிய மாற்றம் – குடும்ப தலைவிகள் ஹாப்பி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular