
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், “50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இலவச முழு உடல் பரிசோதனை வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். அதன்படி, 2025 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் இலவச முழு உடல் பரிசோதனை செய்யும் அறிவிப்பு ஒன்றை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதாவது, “ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 50 வயதை கடந்தவர்களில், வயது மூப்பின் அடிப்படையில் 150 அரசு ஆசிரியர்களை தேர்வு செய்ய” உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், “அவர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து வருகின்ற 28.02.2025 தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு” தெரிவிக்கப்பட்டுள்ளது.