
பள்ளிக்கல்வித்துறையில் தற்காலிக பணியிடங்கள் 2012- 2013 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு தோற்றுவிக்கப்பட்ட 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பலருக்கு ஜூலை 2023 முதல் டிசம்பர் 2023 முடிய ஆறு மாத காலத்திற்கு ஊதியக் கொடுப்பாணை வெளியிடப்பட்டு உள்ளது.
900 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது தற்காலிக பணியிடங்களுக்கு ஜூலை 2023 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2023 ஆம் ஆண்டு வரை 6 மாத காலத்திற்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவான ஊதிய கொடுப்பானை வழங்கப்பட்டுள்ளது. மேற்படி அலுவலர்களுக்கான ஜூலை 2023 முதல் டிசம்பர் 2023 வரை 6 மாத காலத்திற்கு சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதிய பட்டியல் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு ஊதியம் பெற அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.