
சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதங்கம் வென்ற மாணவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கும் உதயநிதி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
பின், அவர் மேடையில் பேசும்போது மாணவர்களுக்கு அறிவுரைகளும் வழங்கியுள்ளார். அதில் அவர், மாணவர்கள் பாடத்தை அப்படியே படிக்காமல், புரிந்து கொண்டு தெளிவாக படிக்குமாறு அறிவுரை கூறினார். அரசு பள்ளிகளுக்கு மட்டுமில்லாமல் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் துணை நிற்கும் என்று கூறியுள்ளார். மேலும், PT Period-ஐ கடன் வாங்கி கணக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ளார். ஏனென்றால், மாணவர்கள் விளையாடுவதால் அவர்கள் உடல் நலத்துடன் இருப்பார்கள், அந்த நேரத்தை கடன் வாங்கி வீணடிக்காதீர்கள் என்று கணக்கு மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.