தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கு சிறந்த முறையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு ஹெலன் கெல்லர் விருது வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது..
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறந்த கல்வியை அளிக்கும் ஆசிரியர்களுக்கு ஹெலன் கெல்லர் விருது வழங்க உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு, தமிழ்நாடு வெளியிட்ட அரசாணையில் சிறந்த ஆசிரியர்கள் பிரிவில் இரண்டு விருதுகளும் சிறந்த ஆரம்ப நிலைய பயிற்சி ஆசிரியர்களுக்கு ஒரு விருதையும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, மேலும் இந்த விருது வழங்கும் விழாவானது டிசம்பர் 3 இல் உலக மாற்று திறனாளிகள் தினத்தன்று ஹெலன் கெல்லர் பெயரில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு உத்திரட்டுள்ளது, மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களை சமுதாயத்தில் வரவேற்கும் வகையிலும் அவர்களுக்கான எதிர்காலம் அவர்கள் கையில் இருக்கிறது என்பதை அடையாளம் காட்டும் வகையிலும் ஆசிரியர்கள் அவர்களை ஊக்கப்படுத்துவதை கௌரவிக்கும் வகையிலும் சிறந்த ஆசிரியர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது..!!