ஆசிரியர்களுக்கு 7,267 காலி பணியிடங்கள்..!! இன்றே கடைசி நாள்..!! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!!

ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகள் இந்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட உண்டு உறைவிட பள்ளிகளாகும். நவோதயா வித்யாலயா பள்ளிகளைப் போலவே இந்த பள்ளிகளும் பழங்குடியின மாணவர்களுக்கு தரமான கல்வி, உணவு மற்றும் தங்குமிடம் ஆகிய வசதிகளை இலவசமாக வழங்குகிறது. இந்த அரசு பள்ளிகளில் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலமாக சுமார் 7,267 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. முதல்வர், பட்டதாரி ஆசிரியர், விடுதிக்காப்பாளர், இளநிலை செயலக உதவியாளர், கணக்காளர் மற்றும் உதவி அதிகாரி என பலவித பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது .

 

இந்தப் பணியிடங்கள் மத்திய அரசு பணிகளில் சேர விரும்பும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்புகள், B. Ed, நர்சிங் போன்ற சம்பந்தப்பட்ட துறையில் உள்ள பட்டப் படிப்புகளை முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் ஏற்றது போல கல்வித் தகுதி மாறுபடும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 23 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் https://nesms.tribal.gov.inஎன்ற அதிகாரப்பூர்வை இணையதள பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

இடிமின்னல் பாதிப்புகளை தடுக்கும் குறிப்புகள்..!! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

நமது உடலைப்பற்றிய வியப்பான தகவல்கள் உங்களுக்காக..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular