ஆசையாக சாப்பிட்ட மட்டன் எலும்பு தொண்டையிலேயே சிக்கியதால் சோகம்..!! அவதிப்பட்ட 66 வயது முதியவர்.!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் யாதாத்ரி பகுதியை சார்ந்த 66 வயதுடைய முதியவர் கடந்த மாதம் ஆட்டு இறைச்சி சாப்பிட்டு உள்ளார். அதன் பின் அவருக்கு வயிற்று உபாதை மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்பட்டுள்ளது.

ஆட்டு இறைச்சி உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் இருக்கும் என்று எண்ணி இருந்த நிலையில் உடல் நலப் பிரச்சினை சரியாகாத காரணத்தால் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதி ஆகி உள்ளார். அங்கு அவருக்கு அல்சருக்கான சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல்நலம் தேவையில்லை. பின் அங்குள்ள பிரதான மருத்துவமனையில் அனுமதியான முதியவருக்கு மேற்கொண்ட சோதனையில் அவரின் உணவுக் குழாயில் எலும்பு துண்டு சிக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மருத்துவர்கள் துரிதமாக எலும்பை வெளியே எடுத்தனர், நல்ல வாய்ப்பாக முதியவரின் உடல்நலம் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை, சிறிது காலத்திற்கு அவரை திரவ வடிவிலான காரம், புளிப்பு, உப்பு குறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.

Read Previous

“பிறந்து 3 மணிநேரம் தான்” – பச்சிளம் குழந்தையை நடுரோட்டில் வீசிச்சென்ற அவலம்..!! திருநங்கைக்கு குவியும் பாராட்டு.!!

Read Next

பணிக்கு வரும் வழியில் சோகம்..!! காரை ஓட்டியபோதே மாரடைப்பால் பிரிந்த உயிர்..!! மறையும்போதும் மனிதநேயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular