ஆசை வார்த்தை கூறி சிறுமிகள் பலாத்காரம்..!! 2 பேர் கைது..!! போலீஸ் விசாரணை..!!
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் கடந்த வாரம் திடீரென மாயமாகியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் திருப்பூரில் இரண்டு சிறுமிகளும் அதுல் ஜோமி, அகிலேஷ் அனில்குமார் ஆகிய இளைஞர்களுடன் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, சிறுமிகளை மீட்ட போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமிகளிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.