தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது என்பது நமக்கு நன்றாகவே தெரியும். பல கட்சிகள் தங்களது கூட்டணிகளை அறிவித்து வருகின்றது. மேலும் ஒரு சில கட்சிகளின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்? யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வார்கள் என்று மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒரு செய்தியை அறிவித்துள்ளார். பாஜக மற்றும் பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என்று அவர் அறிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு துணை முதல்வர் பதவி என்ற ஆசை வார்த்தைகள் கூறி தன்னை வீழ்த்த முடியாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அதிமுகவுக்கு அடுத்து விஜய் கட்சி திறந்து வைத்த கதவையும் தான் மூடி வட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது திமுக கூட்டணியில் உள்ள விசிக தேர்தலுக்கு முன்பு அணி மாறும் என்று கூறப்பட்ட நிலையில் அக்கட்சியின் தலைவர் இப்படி கூறியுள்ளார்.




