ஆடாதொடை.. TB, மூச்சுத்திணறல் சரியாக..!! பயன்கள்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

ஆடாதொடை ( T. B. , மூச்சுத்திணறல் சரியாக)

 

நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் ,வெள்ளை நிற பூக்களையும் உடைய குருஞ்செடி, சிற்றூர்களில் வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது .தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை பூ வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை .சளி நீக்கி இருமல் தனிப்பானாகவும் வயிற்றுப் பூச்சிக் கொள்ளியாகவும் இசிவு நோய் நீக்கியாகவும் செயல்படும்..

 

#இலைச்சாறும் தேனும் சம அளவு கலந்து சர்க்கரை சேர்த்து தினம் நாலு வேளை கொடுக்க நுரையீரல் ரத்த வாந்தி கோழை மிகுந்து மூச்சுத்திணறல் இருமல் ரத்தம் கலந்த கோழை வருதல் ஆகியவை குணமாகும் குழந்தைகளுக்கு ஐந்து துளி இலை சாறு ஐந்து துளி தேன் சிறுவர்களுக்கு 10 துளி இலைச்சாறு 10 துளி தேன் பெரியவர்களுக்கு 15 துளி இலைச்சாறு 15 துளி தேன்

. …

 

#இலை சாறு இரண்டு தேக்கரண்டி எருமை பாலில் காளை மாலை கொடுத்து வர சீதபேதி , இரத்தபேதி குணமாகும்

 

# 10 இலைகளை அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி தேன் கலந்து காலை மாலை 40 நாள்கள் பருகிவர என்புருக்கி என்னும் T. B காசம் ,ரத்தக் காசம், சளி சுரம், சீதள வலி, விலாவலி ஆகியவை தீரும்..

 

#ஆடாதொடைவேர் உடன் கண்டங்கத்திரி வேர் சம அளவு சேர்த்து இடித்து சலித்து அறை முதல் ஒரு கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு ,சுவாசகாசம், சன்னி, ஈளை, இருமல், சளி, சுரம், என்புருக்கி ,குடைச்சல் வலி ஆகியவை தீரும். கைகண்ட மருந்து

 

#ஆடாதொடை இலையையும் ,சங்கன் குப்பி இலையையும் வகைக்கு ஒரு பிடி அரை லிட்டர் நீரில் போட்டு பாதியாக காய்ச்சி காலை மாலை பருகிவர குஷ்டம், கரப்பான், கிரந்தி ,மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்று வலி தீரும்.

 

#உலர்ந்த ஆடாதொடை இலை தூளை ஊமத்தை இலையில் சுருட்டி புகை பிடிக்க மூச்சுத் திணறல் உடனே தீரும்..

 

#700 கிராம் தூய இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கியதில்.,அக்ரகாரம், சித்தரத்தை வகைக்கு 10 கிராம் ,லவங்கம் 10 கிராம் ,ஏலம் நாலு ஆகியவற்றை தூள் செய்து போட்டு பொன்வருவலாய் வறுத்து இரண்டு லிட்டர் நீர் விட்டு ஒரு லிட்டராக காய்ச்சி வடிகட்டியதில் ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து தேன் பதமாக காய்ச்சி {இதற்குப் பெயர் ஆடாதொடை மனப்பாகு} இதை வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிடவும் நீர் கோவை தீரும் ..ஒரு நாளைக்கு மூன்று வேலையாக நீண்ட நாட்கள் கொடுத்து வர காசம் ,என்புருக்கி, மார்புச்சளி ,கபஇருமல், ப்ளூரசி, நீடித்த ஆஸ்துமா ,நிமோனியா காய்ச்சல் ஆகியவை குணமாகும் ..குறல் இனிமை உண்டாகும்

 

#ஆடாதொடை ,கோரை கிழங்கு, பற்பாடகம், விஷ்ணுகாந்தி ,துளசி ,பேய் புடல் ,கஞ்சாங்கோரை ,சீந்தில் வகைக்கு ஒரு பிடி ஒரு லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக காய்ச்சி வேலைக்கு 50 மில்லி அளவாக பருகிவர (#அஷ்டமூல கசாயம்) எவ்வித சுரமும் நீங்கும்..

 

ஆடாதொடை வேர் கசாயத்தை கடைசி மாதத்தில் காலை மாலை கொடுத்து வர #சுகப்பிரசவம் உண்டாகும்..

Read Previous

ஒவ்வொரு நாளும் உணர்த்துகிறது இந்த வாழ்க்கை..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் வெளியாகும் எஸ் கே 23 படத்தின் அப்டேட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular