ஆடாதோடை மூலிகையின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்..
தொண்டை கரகரப்பு அதிக சளி ஆகியவற்றை குணப்படுத்தும் சுவாசப் பாதைகளை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது, ரத்த தட்டுகள் மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது, ஆடாதொடை இலைகளை நீரில் கொதிக்க வைத்து அதனை வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா இருமல் காய்ச்சல் போன்ற நோய்கள் குணமாகும், ஆடாதோடை இலை தூதுவளை இலை சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை வேலைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும், மேலும் கபம் மட்டும் இல்லாமல் ரத்த கொதிப்பு பெண்களின் மாதவிடாய் கால அதிக உதிரப்போக்கு பிரசவத்தின் போது ஏற்படும் உதிரப்போக்கு குறையவும் கர்ப்பப்பை வலுவடையவும் செய்கிறது, ஆடுதோடையைக் கண்டால் பாடாத நாவும் பாடும் என்ற மருத்துவ பழமொழியும் உண்டு..!!




