ஆடிப்பூரத்தில் செல்வம் பெருக இந்த ஒரு வழிபாட்டை செய்யுங்கள்..!!
ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரத்தில் பெருமாள் கோயிலில் சென்று வழிபாடு நடத்துவது சிறப்பு. அனைத்து அம்மன் கோயில்களிலும் நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாக்களில் வளையல் வாங்கிக் கொடுத்து வழிபடலாம். கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் வளையல்களை வாங்கி பெண்கள் அணிந்து கொண்டால், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவை விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வீட்டில் இருக்கும் அம்மன் படங்களுக்கு வளையலை மாலையாக கட்டி போடலாம்.