ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு ஒருவேளை விரதம் இருந்து இப்படி செய்வதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகுமாம்.
ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர நாளில் பெருமாள் கோவிலுக்கு சென்று ஆண்டாளுக்கு வழிபாடு செய்வது நல்லது, அனைத்து அம்மனுக்கு வளைகாப்பு நடக்கும் கோவில்களிலும் வளையல் வாங்கி கொடுத்து தரிசனம் பெறுவது பெண்களுக்கு சிறந்தது, அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்வு நடந்த பின் சக்கரை பொங்கல், வளையல் மற்றும் பூ, பொட்டு, குங்குமம் என்று வழங்கப்படும் இதனை திருமணம் ஆன பெண்கள் வாங்கிக் கொள்ளலாம் மற்றும் திருமணமாகாத பெண்களும் வாங்கிக் கொள்வதினால் கூடிய விரைவில் திருமணம் ஆகும் என்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வாங்கிக் கொண்டால் சீக்கிரமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது..!!