ஆடிப்பூரம் 2024..!! இதை செய்தால் கோடி புண்ணியம்..!!
2024 ஆம் ஆண்டு ஆடிப்பூரம் ஆகஸ்ட் 7ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகின்றது. பூரண நட்சத்திரமானது ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை 6.42 மணி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு 9.3 வரை உள்ளது. ஆனால், ஆகஸ்ட் 7ஆம் தேதி முழுவதும் ஆடிப்பூரண வழிபாட்டினை மேற்கொள்ளலாம். எனவே, குழந்தை பாக்கியமும் திருமண பாக்கியமும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு வளையல் குங்குமம் வாங்கி கொடுத்து, வேண்டிய வரங்களை பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு செய்பவர்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் விரைவில் நடக்கும்.