நடிகர் தனுஷ் படைப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ராயன். இப்படத்தில் ஹீரோவாக நடிகர் தனுஷ்,நடிக்க, நடிகை துஷாரா விஜயன், சுந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் 3வது பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வரும் ஜூலை 6 ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி முதல் அதன் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என படக்குழு தனது X தளத்தில் அறிவித்துள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. மேலும் “ராயன்” திரைப்படம் வரும் ஜூலை 26ம் தேதி அன்று ரிலீஸாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.