ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம்:
ஆடி மாதம் வந்துவிட்டாலே அடுத்தடுத்து பண்டிகை காலம் தொடங்கி விடும். ஆடி மாதத்தை கர்கடக மாதம் என்று சொல்வார்கள். அதாவது சூரிய குரு புணர்பூசம் 4ம் பாதத்தில் நுழையும்போது கடகராசியில் சூரியன் செல்வதே ஆட மாத துவக்கம் என்று கூறுவார்கள்.
ஆனால், ஆடி மாதமும், மார்கழி மாதமும் சுபகாரியங்கள் நடத்த ஏற்ற மாதங்கள் கிடையாது. இந்த மாதங்களை பீடை மாதங்கள் என்று சொல்வது தவறான விஷயம். இந்த மாதம்தான் இறைவழியில் நம்மை அழைத்துச் செல்லும் மாதம்.
ஆடி மாதத்தில் திருமணம் செய்தால், 10ம் மாதம் சித்திரை மாதமாகும். அந்த மாதம் வெப்பம் அதிகமாக இருக்கும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனால்தான் ஆடி மாதத்தில் திருமணம் செய்வதை முன்னோர்கள் தவிர்த்தனர்.
அதேபோல், ஆடி மாதத்தில் பூமி நகரும். அப்போது பூமி நகரும்போது நில அதிர்வுகளும், கடல் சீற்றமும் அதிகமாக இருக்கும். காற்றும் அதிகமாக வீசும். பலத்த மழை பெய்யும். ஆடி மாதம் என்றால் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும்.
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களிலும், வீடுகளும், தெலுக்களிலும் விழா களைக்கட்டும். மேலும், ஆடி மாதத்தில் கோவில்களில் சிறப்பு பூஜைகள், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல் என்று அந்த மாதம் முழுவதும் வழிபாடு மாதமாக காணப்படும்.