நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் கல்யாணி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் இவருடைய மகள் கோபிகா (17) வயது மதிக்கத்தக்கவர், நாமக்கல்லில் உள்ள தனியார் கேட்டரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் கல்லூரி சார்பாக பயிற்சி வகுப்புகளுக்கு கோடை ஸ்தலங்களில் உள்ள விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்த வகையில் மூன்று மாணவிகள் கொல்லிமலை, வாசலூர்பட்டி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பயிற்சி பெற்று வந்தனர், இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு குளியல் அறையில் இருந்து வெளியில் வந்த மாணவி கோபிகா திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார், வரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது மாணவி கோபிகா இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர், தகவல் அறிந்த வாழவந்தி காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர், பின்னர் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோபிகாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் போராட்டம் நடத்தினார்கள்..!!