மேற்குலக நாடுகளில்‘பாப்பி விதை’ என்று அழைக்கப்படும் கசகசாவின் பயன்பாடு தற்போது எல்லா நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
உணவுகளில் கசகசாவுக்கு தனி இடம் உண்டு.
இது இந்தி மொழியில் ‘கஸ்கஸ்’ என்று அழைக்கப்படுகிறது.
இது பல மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையும் கூட. கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமங்களை அதிக அளவு கொண்டுள்ளது.
கசகசாவை தயாரிப்பது எப்படி?
அலங்காரத்துக்கென்று பயன்படுத்தப்படும் பாப்பி மலரின் செடி விதைகளிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது.
இந்த விதைப்பைகள் நன்றாக காயவைக்கப்பட்டு அதிலிருந்து தயாரிக்கப்படுவது தான் கசகசா.
பலரும் இது போதை பொருளாகவே பார்க்கிறார்கள். ஆனால் இவை போதை தருவதில்லை.
பல நாடுகளில் கசகசாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் இதை அசைவ உணவுகளிலும் ஆண்களுக்கு வீரியம் அளிக்கும் உரமாகவும் கசகசா பயன்படுத்தப்பட்டது.
இனி நன்மைகளை பார்க்கலாம்
- ஆண்மை பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும்.
- கருப்பையில் பெலோப்பியன் குழாய்களை சுத்தம் செய்ய உதவுகிறது.
- கசகசாவில் செய்ய கூடிய பானத்தை அருந்தி வருவதினால் மன அழுத்த பிரச்சனை சரியாகும்.
- தூக்கமின்மை பிரச்சனை சரிசெய்யப்படுகின்றது.
- வளரும் பருவத்திலேயே கசகசாவை அவ்வபோது உணவில் சேர்த்துவருவதன் மூலம் இவை எலும்பு திசுக்களை உறுதிப்படுத்துகிறது.
- மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்பு, தாமிரம், கால்சியம் சத்துகள் கசகசாவில் உண்டு.
- கசகசாவில் இருக்கும் ஒலிக் அமிலமானது உடலில் ரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
- இவை தவிர தைராய்டு, வாய்ப்புண் கோளாறுகள், கண்பார்வை சீர்பட, சிறுநீரககல் தவிர்க்க, நீரிழிவு நோயாளிகள், வலி நிவாரணியாக, செரிமானத்தை எளிதாக்க என பலவகையில் பயன் தருகிறது .
- உணவில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுகளை கசகசா விதை எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் குறைக்கலாம்.
மருத்துவம்
தூக்கம் – சிறிதளவு கசகசாவை பேஸ்டு போல் அரைத்து பாலுடன் சேர்த்து காய்ச்சி ஒரு கிளாஸ் தினமும் அருந்தி வர நன்றாக தூக்கம் வரும்.
அளவுக்குமேல் பயன்படுத்தினால் உயிரையே பறித்துவிடும்
- கசகசாவை உட்கொள்வதால் சில எதிர்மறையான பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன. கசகசா ஓப்பியம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
- இதை சுத்திகரிக்கும்போது மிகவும் சக்தி வாய்ந்த ஒப்பியேட் மருந்துகளை உருவாக்க முடியும்.
- தாங்க முடியாத நீண்ட கால வலிகளுக்கு இவை மருந்தாக பயன்படுகிறது.
- போதைக்காக தெருவோரங்களில் பயன்படுத்தும் கசகசாவில் இருந்து தயாரிக்கும் ஹெராயின் நிறைய பேரின் வாழ்க்கையை அழிக்கிறது.
- நாம் கசகசாவை பயன்படுத்தும் போது இத்தகைய எதிர்மறையான பக்க விளைவுகளையும் கருத்தில் கொண்டு பயன்படுத்த வேண்டும்.
- கசகசாவை மிக அதிக அளவில் உட்கொள்ளும்போது, அது நம்மை இன்னும் அதிகமாக உட்கொள்ளத்தூண்டும்.
- இது கசகசாவின் மிக சிக்கலான பக்க விளைவாகும்.
- ஏனெனில் ஒப்பியேட் அடிமைப் பழக்கத்தை உருவாக்கும் தன்மை கொண்டது.
- ஒப்பியேட்டின் அளவு அதிகமாக அதிகமாக உடல் சகிப்புத்தன்மையை உண்டாக்கிக்கொள்ளும்.
- அதனால் இன்னும் அதிகமாக உட்கொள்ளத் தூண்டும். இதனால் ஓவர் டோஸாகி அபாயமான விளைவுகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
மருத்துவ பரிசோதனைகள்
கசகசாவில் இருந்து அதிக சத்துகளை பெற விழையும் போது, நமக்கு தெரியாத அதன் மோசமான பக்க விளைவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் சிறிதளவு கசகசாவை சேர்த்து கொண்டு பிறகு மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்லும் போதும், அதன் முடிவுகள் சரியாக இருக்காது.
எனவே மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்லும் போது, கசகசா சேர்த்த உணவை தவிர்ப்பது நலம்.
குறிப்பு
உணவோடு சேர்த்து எடுத்துகொள்ளும் போது இவை பாதுகாப்பானது.
ஆனால் தனியாக இதை தேநீர் வடிவிலோ, நீரில் ஊறவைத்தோ குடிக்கும் போது சமயங்களில் ஒவ்வாமையை உண்டாக்கும்.
அதே நேரம் மருத்துவரின் ஆலோசனையுடன் பரிந்துரைக்கப்பட்ட அளவு எடுத்துகொள்ளும் வரை எந்த பிரச்சனையும் இராது அளவாக எடுத்துகொண்டால் இவை ஆரோக்கியமே. ஆண்களுக்கு வீரியமிக்க பலம் தருவதும் உண்மையே.