
மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட ஏலக்காய் ஆண்கள் ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஏலக்காய்
மருத்துவத்திலும், உணவிற்கு வாசனை சேர்க்கும் பொருளாகவும் பயன்படும் ஏலக்காய், இனிப்பு செய்யும் போது அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
அதிகமான சத்துக்களைக் கொண்ட ஏலக்காய் பல உடல்நலப் பிரச்சனையை தீர்க்கின்றது. ஏலக்காய் நீரிழிவு நோயாளிகள், ஆஸ்துமா, இதய பாதிப்பு போன்ற தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன் அளிக்கிறது.
ஏலக்காயும் இஞ்சி குடும்பத்தைச் சார்ந்தது என்று சொல்லப்படுகிறது. இரண்டிற்குமான ஆரோக்கிய நன்மைகள் ஒன்றாகவே இருக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் தினமும் ஆண்கள் 2 ஏலக்காய் சாப்பிடுவதால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது. அவற்றினை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
ஆண்கள் ஏன் சாப்பிட வேண்டும்?
ஆண்கள் இரவு தூங்குதவதற்கு முன்பு பாலிலோ அல்லது தண்ணீரிலோ கலந்து இரண்டு ஏலக்காயை சாப்பிட்டு வந்தால், ஆண்மை குறைபாடு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்ரோன் அளவை மேம்படுத்த உதவுகின்றது.
உயர்த்த ரத்த அழுத்தத்தை குறைக்கவும், ரத்த அழுத்தத்தினை சீராக வைத்துக் கொள்ளவும் இரவில் தூங்குதற்கு முன்பு ஏலக்காய் எடுத்துக் கொள்ளவும்.
வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கவும், பற்களை சுத்தம் செய்யவும் உதவுகின்றது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கவும், கிருமிகள் உடம்பில் நுழைவதை தடுக்கவும் ஏலக்காய் உதவுகின்றது.
வயிற்றில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைக்க ஏலக்காய் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
ஏலக்காய் சாப்பிடுவதால் நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதுடன், சளி பிரச்சனையைப் போக்கவும் செய்கின்றது. நோய்க்கிருமிகள், நோய் நுண்ணுயிரிகளுக்கு எதிராக பாதுகாக்கும்.
குமட்டல் மற்றும் வாந்தி உணர்வை தணிக்கும் பண்புகள் ஏலக்காயில் உள்ளது.