ஒரு பெண்ணின் மனது இயற்கையாக தான் நேசிப்பவனிடம் இருந்து அவளுக்காக என்ன மாதிரியான பேச்சு, பொய்கள், செயல்களை எதிர்பார்க்கிறது.
ஒரு பெண் எதிர்ப்பார்ப்பது தன்னை புரிந்து கொண்ட அன்பான ஒருவரை தான்.
எப்படி இருக்காய், சாப்பிட்டியா, என்ன ஆச்சு, இன்னைக்கு நாள் எப்படி போச்சு போன்ற அன்பான வார்த்தைகளை தான்.
சின்ன சின்ன விஷயங்களை ஞாபகப்படுத்தி வைத்து பேசும் பொழுது நம்மை இவ்வளவு கவனிச்சிருக்காங்கன்னு சந்தோஷப்படுவார்கள்.
ஆறுதலாக பேசும் பொழுது தனக்காக ஒருத்தர் இருக்கார்ன்னு நம்பிக்கை வரும்.
விரல் பிடித்து சாலையை கடக்க செய்யும் போது பெண் அந்த ஆணின் செயலால் ஒரு குழந்தையாகவே மாறி விடுகிறாள்.
கோவப்பட்டு பேசும் போது அதை கூட பெண்கள் ரசிக்க தான் செய்கிறார்கள் தவறு செய்யும் பொழுது தன்னை கண்டிக்க ஒருத்தர் இருக்கார்ன்னு மகிழ்வார்கள்.
வைரமோ, தங்கமோ வாங்கி தர வேண்டாம் ஒரு சின்ன சாக்லேட் கூட அன்பாக வாங்கி தரும் போது பெண்கள் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார்கள் அவர்கள் முகத்தில் அளவு கடந்த மகிழ்ச்சியை உண்டாக்கும் நீங்கள் அன்போடு அதை செய்யும் பொழுது.
இவள் என்னுடையவள் என்று எல்லோரிடமும் ஒளிவு மறைவின்றி கூறும் ஆணின் தைரியம் தான் அவளை கவர்கிறது.
பெண்கள் ரொம்ப எமோஷனல் ஆனவர்கள் அவர்களுக்கு பொஸஸிவ்னஸும் அதிகம்.
தன்னுடைய கணவன் வேறு பெண்களுடன் சிரிச்சி பேசிக்கிட்டு இருந்தால் கண்டிப்பாக கோபப்படுவார்கள் அதை கணவன் புரிந்து கொண்டு தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று நினைப்பார்கள்.
பீரியட்ஸ் நேரங்களில் உடம்பு எப்படியிருக்கு போன்ற விசாரிப்புகள் தான் காதலை பலப்படுத்துகிறது அந்த அக்கரை தான் பெண்களுக்கு அத்தியாவசியமான ஒன்று.
இதையெல்லாம் பண்ண முடியாதுன்னு இல்லை ஆனால் ஆண்களுக்கு இதையெல்லாம் செய்வதில் என்ன தயக்கம்னு தான் புரியவில்லை.
ஆண்கள் தங்கள் மனதில் நினைப்பதை சொல்லாமலேயே பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்ப்பார்கிறார்கள் சொல்லாமல் எதுவுமே புரிந்து கொள்ள முடியாது.