
🧔🧔🧔🧔🧔
ஆண்களுக்கும் வெட்கம் உண்டு தன் முதல் காதலிக்கு காதல் கடிதம் கொடுக்கும் நேரத்தில். …
ஆண்களுக்கும் கூச்சம் உண்டு
திருமண பேச்சை அம்மா முதன்முதலாய்
சொல்லும் நேரத்தில். ….
ஆண்களுக்கும் மாதாந்திர வலி உண்டு
மாத கடைசி மூன்று நாளில் குடும்பத்தை ஓட்டும் நேரத்தில். ….
ஆண்களுக்கும் பிரசவ வலி உண்டு
மனைவி தலைப்பிரசவத்தில் உள்ளே
இருக்கும் நேரத்தில். …
ஆண்களுக்கும் பயம் உண்டு
நேர்முக தேர்வில் குடும்ப பொறுப்பை ஏற்று
அவர்கள் கேட்கும் நேரத்தில். …
ஆண்களுக்கும் கற்பு உண்டு
காதலி இருக்கும் போது கண்டவள்
பேசும் நேரத்தில். …
ஆண்களுக்கும் திமிர் உண்டு
அனைத்து வலிகளையும் சேர்த்து
அழும் நேரத்தில். ….
ஆண்களுக்கும் அழகு உண்டு
ஆங்காங்கே அரும்பு மீசை
முளைக்கும் நேரத்தில். ….
ஆண்களுக்கும் தாய்மை உண்டு
தன் மகளை ஆசையாக
கொஞ்சும் நேரத்தில். ….
ஆண்களுக்கும் நாணம் உண்டு
காதல் சொன்னதும் காதலி முகம்
பார்க்கும் நேரத்தில். ….
ஆண்களுக்கும் அழுகை உண்டு
பல ஏமாற்றங்களை நெஞ்சில்
சுமக்கும் நேரத்தில். …
ஆண்களுக்கும் பொறுப்பு உண்டு
தான் சாப்பிடாமல் தன் குழந்தைக்கு
ஊட்டும் நேரத்தில்…
#யானை #yaanai #viralpost #facebookpost #facebookviral