ஆண்மகன் காதலி மற்றும் மனைவியிடம் மறைக்கும் விஷயங்கள்..!!

ஆண்மகன் தனது மனைவி மற்றும் காதலி கிட்ட மறைக்கும் விஷயங்கள் பற்றி இங்கே தெளிவாக பார்ப்போம்.. காசு, பணம் போன்றவற்றை காதலி மற்றும் மனைவியிடமோ அவ்வளவாக மறைக்க மாட்டார்கள் வெளிப்படையாக இருக்கவே விரும்புவார்கள் ஆனால் அவர்கள் மறைக்க விரும்பு விஷயம் என்னவென்றால்..

மனைவி மற்றும் காதலியை தவிர்த்து மற்றொரு பெண்ணுடன் கொண்டுள்ள தொடர்பு, பாலியல் ரீதியான தொடர்பு பற்றி ஆண்கள் ரகசியமாக காக்க விரும்புகின்றனர். தனது தொலைபேசி மற்றும் கைபேசி கடவுச்சொல்லை பெரும்பான்மையான ஆண்கள் தன் மனைவி மற்றும் காதலிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை. அதுவும் இந்த காலகட்டத்தில் அதிகமாக நடக்கிறது.

தன் நண்பர்களுடன் தான் பேசும் விஷயங்கள் பகிர்ந்து கொண்டவை போன்றவற்றை தனது மனைவி மற்றும் காதலி கிட்ட ஒரு பொழுதும் சொல்லவே மாட்டார்கள். காதலி மற்றும் மனைவியின் தோழியுடன் தான் பேசும் விஷயங்கள் ஆண்கள் பெரும்பாலும் மறைக்க விரும்புகின்றனர் அல்லது முழுவதுமாக கூற மாட்டார்கள்.

கஷ்டத்தில் மாட்டி தவிக்கும் ஆண்கள் பெரும்பாலும் அழுவது, சோகமான படங்களை பார்ப்பது போன்றவற்றை ஒருபோதும் தனது மனைவி மற்றும் காதலியிடம் கூறுவதில்லை. மனைவி மற்றும் காதலியை தாண்டி வேறு ஒரு பெண்ணுடன் வழியும் ஆண்கள் இது குறித்து முற்றிலுமாக மறைக்கின்றனர்.

தனது கைபேசி, மடிக்கணினியில் மறைத்து வைத்திருக்கும் அந்த மாதிரி ஆபாச படங்கள் குறித்து தனது காதலி, மனைவியுடன் கூட ஆண்கள் பகிர்வதில்லை. இருட்டு, நாய் போன்றவற்றைப் பார்த்தாலே பயப்படும் ஆண்கள் இது குறித்து ஒருபொழுதும் தனது மனைவியும் மற்றும் காதலியிடம் சொல்லுவதில்லை.

Read Previous

வடக்கு, மேற்கு திசையில் ஏன் தலை வைத்து படுக்கக் கூடாது தெரியுமா?..

Read Next

மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய ரம்யா பாண்டியன்..!! வைரலாகும் வீடியோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular