ஆண்மையை அதிகரிக்கணுமா?.. இந்த விதைகள் இருந்தா போதும்..!!

பொதுவாகவே கோடை காலம் வந்துவிட்டால்  தர்பூசணியின் வருகையும் கூடவே ஆரம்பித்துவிடும். தர்பூசணியானது அதிகளவான நீர்ச்சத்து கொண்டிருப்பதால் உடலை போதுமான அளவு நீர்சத்துடன் வைத்திருக்கும்.

மேலும், தர்பூசணியில் அதிக வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இது எமது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்தை அதிகம் கொண்டிருக்கிறது.

இதில், ஏராளாமான நன்மைகள் நிரம்பியிருப்பதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். தர்பூசணி சாப்பிடுவதை விரும்பாத ஒருவரைக் கண்பது கடினம் என்றால் மிகையாகாது.

ஆனால் தர்பூசனியின் நன்மைகள் குறித்து தெரிந்த பலருக்கும் அதன் விதைகளில் இருக்கும் அளப்பரிய நன்மைகள் குறித்து தெரிந்திருக்க வாய்பில்லை.தர்பூசணி விதைகளில் இருக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தர்பூசணி விதையின் நன்மைகள்

தர்பூசணி விதைகளில் கலோரிகள் மிக மிகக் குறைவு.எனவே அது அதிக உடல் எடையை குறைக்கவும் உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.

அதேசமயம் உடலுக்குத் தேவையான காப்பர், ஸிங்க், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்ற அனைத்து ஊட்டச்சத்துக்களும் இந்த விதைகளில் செறிந்து காணப்படுகின்றது.

குறிப்பாக ஆண்களின் ஆரோக்கியத்துக்கு தர்பூசணி விதைகள் மிகவும் துணைப்புரிகின்றது. விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துதில் இந்த விதைகள் அளப்பரிய பங்காற்றுகின்றது.

இந்த விதைகளில் அடங்கியுனள்ள  சிட்ரூலின் ஆண்களின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றது.

தர்பூசணி விதையில் இருக்கும் துத்தநாகம் ஆண்களின் இனப்பெருக்க அமைப்புக்கு வலிமை சேர்க்கின்றது.

மேலும் தர்பூசணி விதையில் இருக்கும் குளுடாமிக் அமிலம், மாங்கனீசு, லைகோபீன், லைசின் மற்றும் அர்ஜினைன் ஆகியவை ஆண்களின் பாலியல் திறனை அதிகரிக்க பெரிதும் துணைப்புரிகின்றது.

ஆண்கள் தர்பூசணி விதைகளை சாப்பிட்டால், அது அவர்களின் கருவுறுதலை அதிகரிப்பது மட்டுமன்றி, செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும்.

விந்தணு பிரச்சினை உள்ளவர்கள் இந்த பழத்தின் விதைகளை தினசரி 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

Read Previous

தெரிஞ்சுக்கோங்க..!! இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற ஒரு அற்புதமான ஆரோக்கிய மருந்து..!!

Read Next

பணமும், நகையும் சேர்ந்து கொண்டே இருக்கணுமா?.. இந்த மோதிரத்தை அணியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular