
அத்திப்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே அத்திப்பழத்தை சாப்பிடுவதால் பல பயன்கள் கிடைக்கிறது என முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரையிலும் அத்திப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம். எந்த உணவாக இருந்தாலும் சரி அளவாக எடுத்துக் கொண்டாலே அது நமக்கு அதீத நன்மைகளை தரும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழியை எது சாப்பிடும்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்நிலையில் அத்திப்பழம் சாப்பிடுவதால் ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆண்மை பெருகும். எனவே ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த அத்திப்பழத்தை எடுத்துக் கொண்டு பயன்பெறுங்கள். அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட மாதவிடாய் வயிற்று வலி முற்றிலுமாக தீரும். அத்திப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் கல்லீரல் மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் வைக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி அத்திப்பழம் சாப்பிடுவதால் இதயத்தை அது பலப்படுத்துகிறது.