ஆண்மை குறைவு..!! வருமுன் காப்பது எப்படி?.. முழு விவரம் உள்ளே..!!

இவ்வாறான உடல்ரீதியிலும், மன ரீதியிலும் துன்பம் தரும் ஆண்மைக் குறைவிலிருந்து வருமுன் தப்பிப்பது எப்படி என்பது தொடர்பில் பார்ப்போம்.

ஆண்மைக் குறைவு என்றால் என்ன?

ஆண்மைக் குறைவு என்பது உடலுறவில் முழுமையாகவோ, பகுதியாகவோ ஈடுபட முடியாமையும், வீரியமுள்ள விந்தணுக்களை கொண்டிருக்காமையையும் குறிக்கின்றது. இவ்வாறான உடல்ரீதியிலும், மன ரீதியிலும் துன்பம் தரும் ஆண்மைக் குறைவிலிருந்து வருமுன் தப்பிப்பது எப்படி என்பது தொடர்பில் பார்ப்போம்.

பக்கவிளைவு

இரத்தக் கொதிப்பு, மனநோய் ஆகியவற்றிற்கு தரப்படும் சில மாத்திரைகள் ஆண்மைக் குறைவை உண்டாக்குவதால் அவற்றுக்கு பதிலாக வேறு வகையான மாற்று மருந்துகளைப் பயன்படுத்துவது நல்லது.

புகைப்பழக்கம்

இப்போதுள்ள இளைஞர்களிடம் புகைப்பழக்கம் அதிகம் உள்ளது. இதனால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஆணுறுப்பு சரிவர விறைப்படையாமல் போகும். புகைப்பழக்கத்தை விட்டுவிட்டால் போது‌ம் இப்பிரச்சனை நாளடைவில் சரியாகும்.

உடல் பருமன்

உடல் எடை அதிகரிக்கும் போது பாலுறவில் நாட்டம் இல்லாமை, விறைப்பு ஏற்படாத நிலை ஆகியவை தோன்றும். எடையைக் குறைப்பதற்கான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வது வருவது நல்லது.

மதுப் பழக்கம்

மதுப்பழக்கத்தால் செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் கொண்டு பாலுறவில் ஈடுபடும் இளைஞர்களுக்கு மூளைச் செயல்திறன் குறைவு, நரம்பு மண்டல பாதிப்புகள், தண்டுவடக் கோளாறு போன்றவை ஏற்பட்டு நாளடைவில் ஆண்மைக் குறைவு உண்டாகும். எனவே மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

சரியான சிகிச்சை

நிபுணத்துவம் பெற்ற பாலியல் மருத்துவர்கள் எழுதிய நல்ல நூல்களை வாங்கிப் படியுங்கள். இவை பாலுறவு பற்றி பல பயனுள்ள தகவல்களைத் தரும். அவ்வாறின்றி பொய்யான நம்பிக்கை தருகின்ற போலி மருத்துவர்களை அணுகுவது, அஞ்சல் மூலமாக அவர்கள் அனுப்பும் லேகியங்களை வாங்கிச் சாப்பிடுவது, வேறுவித சிகிச்சைகள் ஆகியவை கூட அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

சர்க்கரை நோய்

இரத்தத்தில் சர்க்கரையளவு உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதலிலிருந்தே சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் ஆண்மைக் குறைவைத் தவிர்க்கலாம்.

தூக்க, போதை மாத்திரைகள்

தேவையில்லாமல் தூக்க மாத்திரைகள் அல்லது போதை மாத்திரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள்.

Read Previous

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

5 ரூபாய் இருந்தால் இனி மூன்று வேளையும் உணவு..!! முதலமைச்சர் திறந்து வைத்த புதிய உணவகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular