
ஆண்மை பலப்பட இந்த அரிசி மட்டும் சாப்பிடுங்க போதும்..!!
இந்த நவீன காலகட்டத்தில் ஆண்மை குறைவு என்பது பல ஆண்களுக்கு இருக்கிறது. இதனால் பல ஆண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் ஆண்மை பலப்பட ஒரு அரிசி இருக்கிறது அது மட்டும் சாப்பிட்டால் போதும் ஆண்மை பலப்படும். அது என்ன அரிசி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மாப்பிள்ளை சம்பா அரிசி பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கும். இதில் புரதம் நார்ச்சத்து இரும்புச்சத்து துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை கொடுக்கிறது. ஆண்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அரிசி மாப்பிள்ளை சம்பா அரிசி. மாப்பிள்ளை சம்பா உடலுக்கு அதிக அளவில் பலம் கொடுக்கக்கூடிய சத்து நிறைந்த அரிசியாகும். குறிப்பாக மாப்பிள்ளையாக போகிறவர்களுக்கு இது மிகவும் அவசியம். அதனால்தான் இளம் வயது உடைய ஆண்களுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசியை சாப்பிட கொடுப்பார்கள். மேலும் உடலுக்கு வலுவை கொடுக்கக்கூடிய ஏராளமான சத்துக்கள் இதில் உள்ளது. மாப்பிள்ளை சம்பாவின் சிறப்பே ஆண்மையை பலப்படுத்துவது தான். அது மட்டும் இன்றி இதை தினசரி உணவில் சாப்பிடும் போது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.