மனதை தொட்ட பதிவு..!! பெண்களைப் பற்றி ஒரு ஆண் எழுதிய மனதை தொடும் வரிகள்..!!

பெண்களைப் பற்றி ஒரு ஆண் எழுதிய
மனதை தொடும் வரிகள்.

நான் பிறந்த போது என்னைத் தூக்கி அரவணைத்தது ஒரு பெண்- என் அம்மா

என் குழந்தைப் பருவத்தில் எனக்காகப் பரிந்து என்னுடன் விளையாடினாள் ஒரு பெண் – என் சகோதரி.

நான் பள்ளிக்கு சென்ற போது அன்புடன் கல்வி கற்பித்தவள் ஒரு பெண் – என் ஆசிரியை

நான் கவலையுடன் இருந்த போது தோள் கொடுத்து ஆறுதல் சொன்னாள் ஒரு பெண் – என் தோழி

எனக்கு உறவாகவும் உயிராகவும் துணையாகவும் இருந்தாள் ஒரு பெண் – என் மனைவி

நான் கோபமாக இருந்தபோது தனது மழலைச் சொற்களால் என்னை மயங்க வைத்தாள் ஒரு பெண் – என் மகள்

நான் இறக்கும் போது என்னைத் தன்னுள் உறங்கச் செய்வாள் ஒரு பெண் – என் தாய்நாடு

ஒரு பெண் வாழ்க்கையில் தனக்கு ஏற்படும் கவலைகளையும் துன்பங்களையும் தனது பிராத்தனைகளாலும் அசையாத நம்பிக்கையாலும் எதிர்கொள்கிறாள்.

நீ ஒரு ஆணாக இருந்தால் ஒவ்வொரு பெண்ணையும் போற்றி வணங்கு!
நீ பெண்ணாக இருந்தால் அதற்காகப் பெருமைப்படு…

Read Previous

படித்ததில் மனதை போட்டு உலுக்கிய பதிவு..!! விவசாயிகளின் வாழ்க்கை..!!

Read Next

யாரையும் குறைவாக மதிப்பிடக்கூடாது என்பதற்கு இந்த பதிவு நல்ல உதாரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular