• September 11, 2024

ஆதார் அட்டையில் பழைய போட்டோ வச்சிருக்கீங்களா?.. எப்படி மாத்தணும் தெரியுமா?..

ஆதார் அட்டையில் புகைப்படம் மாற்றுவது எப்படி என்பது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஆதார்:

இன்றைய கால கட்டத்தில் ஆதார் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டையானது குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை முதலியனவற்றை கொண்டுள்ளது. இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக ஆதார் அட்டை கருதப்படுகிறது. ஆதார் எண்ணானது தற்போது வங்கிகள் முதல் ரேஷன் அட்டை  வரை அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ள முக்கிய ஆவணமாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் பெயர், படம், முகவரி போன்ற விவரங்களை மாற்ற அல்லது புதுப்பிக்க UIDAI வழங்கிய பல சேவைகளை வழங்கி வருகிறது.

புகைப்படங்களை மாற்றுவதற்கு அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று என்ரோல்மெண்ட் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்ய வேண்டும். பின்பு அதனை பூர்த்தி செய்து ஆதார் சேவை மையத்தில் வழங்க வேண்டும். அதனை தொடர்ந்து கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்கள் அங்கே பதிவு செய்த பின் அங்கேயே புகைப்படம் எடுக்கப்பட்டு அப்டேட் செய்யப்படும். இதற்கு ரூ.50/- கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

Read Previous

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!! இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி..!!

Read Next

ஓய்வூதிய திட்டங்களில் SIP அமைப்பது எப்படி?.. முழு விவரங்களுடன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular