ஆதார் அட்டை தொலைந்து விட்டதா? – இ – ஆதார் பெறுவதற்கு எளிய வழிமுறை..!!

நாட்டின் மிக முக்கிய அடையாள ஆவணமான ஆதார் அட்டையை தொலைத்து விட்டு என்ன செய்வது என்று தவித்து வரும் மக்களுக்கு தேவையான முக்கிய தகவல்கள் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை:
  • மத்திய அரசு நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கியுள்ளது. இன்று பிறந்த குழந்தைகள் முதல் அனைவருக்கும் ஆதார் வழங்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அனைத்து தரப்பு பணிகளுக்குமான சோதனைகள் மற்றும் சரிபார்ப்பு பணிகள் அனைத்தும் ஆதார் அட்டையின் வாயிலாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை தவறுதலாக தொலைத்து விட்டால் அவற்றை மீண்டும் பெற என்ன செய்வது என்று பலரும் தெரியாமல் தவித்து வருகின்றனர். இது போன்ற சந்தர்ப்பங்களில் மின் ஆதாரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • இ- ஆதார் நமது தொலைபேசி, மெயில் போன்றவற்றில் சேமித்துக் கொண்டு, தேவைப்படும் பட்சத்தில் அவற்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்யும் முறைகள்:
  • யூ ஐ டி ஏ ஐ இணையதளத்தின் முகப்பு பக்கத்திற்கு சென்று ஆதார் பதிவிறக்கம் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது ஆதார் பதிவிறக்கம் செய்ய தேவையான ஆதார் எண் உங்களிடம் இருந்தால் அதற்கான விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • இல்லை எனில் பதிவு ஐடியை தேர்வு செய்து அதனை உள்ளிட வேண்டும்.
  • பின்னர் கேட்கப்படும் கேப்ட்சாவை உள்ளிட்டு ஓடிபி பெற்றுக் கொள்ள வேண்டும்.
  • ஓடிபி உள்ளிட்ட பின்னர் உங்களது ஆதார் பதிவிறக்கம் செய்யப்படும்.
  • பதிவிறக்கம் செய்த இ ஆதார் பாஸ்வோர்ட் மூலம் பாதுகாக்கப்பட்டு இருக்கும்.
  • உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்துக்கள் மற்றும் நீங்கள் பிறந்த வருடம் கடவுச்சொல்லாக இருக்கும் இவற்றை உள்ளிட்டு நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Read Previous

பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம்..!! எரித்துக்கொலை செய்த தாய்க்கிழவி.!!

Read Next

தமிழகத்தில் டிச.31ம் தேதி போக்குவரத்து முடக்கம் – காவல்துறை நடவடிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular