தமிழகம் எங்கும் ஆதார் அட்டையின் அவசியம் எல்லோருக்கும் தெரியும் இப்படி இருக்கையில் ஆதார் அட்டை பத்தாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும், இதனை தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்காதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை தந்துள்ளது மத்திய அரசு, ஆதார் அட்டை புதுப்பிக்க ஜூன் 14 தேதியோடு கால அவகாசம் முடிந்த நிலையில் மீண்டும் ஒருமுறை மத்திய அரசு செப்டம்பர் 14 தேதி வரை ஆதார் அட்டையை புதுப்பிக்க வாய்ப்பு தந்தது.
ஆதார் தகவல்களை புதுப்பிக்க விரும்புவர்கள் செப்டம்பர் 14ஆம் தேதி வரை இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஆன்லைனில் புதுப்பிக்க விரும்புவர்கள் https://ssup.uidai.gov.in/ssup/என்ற இணையதளத்தில் புதுப்பிக்கலாம், மேலும் செப்டம்பர் 14ஆம் தேதிக்கு மேல் ஆதார்களை புதுப்பிக்க நினைப்பவர்கள் கட்டடம் செலுத்த வேண்டும் என்றும் மேலும் தகவல் அறிய அருகிலுள்ள இ சேவை மையத்தை அணுகவும்..!!