
இந்தியாவில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை (Aadhaar card) மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. குறிப்பாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவைகளைப் பெறுவது முதல், குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, வங்கி தொடர்பான சேவை, லோன் எடுப்பது, புது சிம் கார்டு வாங்குவது என பல பல விஷயங்களுக்கு இப்போது ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் 10 வருடங்களுக்கு ஒருமுறை ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது ஆதார் அட்டை வழங்கப்பட்ட தேதியில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ள ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும். இதன் மூலம் பொது அடையாள தரவு சேகரிப்பு மையத்தில் உங்கள் பற்றிய தகவல்கள் சரியானதாகவும் துல்லியமானதாகவும் இருக்கும்…
அதுவும் நீங்கள் ஆவணங்களைப் புதுப்பிப்பதற்காகவே UIDAI-இல் ஒரு சிறப்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி Myaadhaar போர்ட்டல் அல்லது Myaadhaar என்ற செயலியில் சென்று updatedocument என்ற அம்சத்தைப் பயன்படுத்தி நீங்கள் ஆவணங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை உங்களுக்கு ஆன்லைனில் ஆவணங்களை எப்படி புதுப்பிக்க வேண்டும் என்பது பற்றி சரியாகத் தெரியவில்லை என்றால், அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு சென்று ஆவணங்களின் நகலை வழங்கி, ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த சேவையை மைஆதார் ‘myAadhaar’ தளத்தில் மட்டுமே இலவசமாகப் பெற முடியும். நீங்கள் ஆதார் மையங்களில் நேரடியாகச் சென்று புதுப்பித்தால் வழக்கம்போல் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்க.
முதலில் https://uidai.gov.in/en/ என்ற இந்த யூஐடிஏஐ (UIDAI) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் முகப்பு பக்கத்தில் ஆதார் என்ரோல்மென்ட் படிவத்தை (Aadhaar Enrolment Form) பதிவிறக்கம் செய்து பிரிண்ட்-அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்…