ஆதார் அட்டையில் ஏதேனும் தகவல்களை இலவசமாக மாற்ற இன்னும் சில நாட்களே உள்ளன. அதாவது சில நாட்களுக்கு முன்பு UIDAI ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, மொபைல் எண், மற்றும் கைரேகை போன்றவரை மாற்றிக்கொள்வதற்கு இலவசமாக கால அவகாசம் கொடுத்தது. இப்போது வரும் செப்டம்பர் 14 ஆம் தேதியுடன் அந்த அவகாசம் முடிவடைய போகிறது. அதன் பின், ஏதேனும் தகவல்களை மாற்ற வேண்டும் என்றால் இனி பணம் செலுத்த வேண்டும் என்று UIDAI ஆணையிட்டுள்ளது.
குறைந்த பட்சம் பணமாக 50 ருபாய் முதல் 100 ருபாய் முதல் வசூலிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு பின், ஆதாரில் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், பாலினம், முகவரி, தொலைபேசி எண் போன்ற தகவல்களை மாற்றுவதற்கு 50 ருபாய் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், பயோமெட்ரிக் தகவல்களான கைரேகை மாற்றுவது, கண்ணின் கருவிழி போன்றவற்றை அப்டேட் செய்வதற்கு 100 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.