ஆதார் அப்டேட் செய்ய மீண்டும் வாய்ப்பு – காலக்கெடு 2024 வரை நீட்டிப்பு..!!

ஆதார் கார்டில் தங்களது விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை தற்போது அரசு நீட்டித்துள்ளது. இதனை பயன்படுத்தி விரைந்து அப்டேட் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதார் அப்டேட்:

இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டுமென ஆதார் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் டிசம்பர் 14ஆம் தேதி வரை ஆதார் அட்டைதாரர்கள் ஆன்லைன் வாயிலாக பெயர், முகவரி உள்ளிட்ட ஆதார் கார்டில் உள்ள தங்களது சுய விவரங்களை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்தது. தற்போது இந்த காலக்கெடுவை அரசு 20204 மார்ச் 14 வரை நீட்டித்துள்ளது. இதுவரை ஆதார் கார்டு அப்டேட்டை மேற்கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அப்டேட் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  1. முதலில் https://www.uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அடுத்ததாக “update your aadhaar” என்பதை கிளிக் செய்து “update demographics data online.”
    என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  3. அதனைத் தொடர்ந்து ஆதார் எண்ணை உள்ளிட்டு கேப்சாவை பதிவிடவும். பிறகு பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு OTP அனுப்பி அதனை அடுத்து வரும் பக்கத்தில் பதிவிட வேண்டும்.
  4. மேலும் மாற்றப்பட வேண்டிய விவரத்தை உள்ளீட்டு அதற்குரிய ஆவணத்தையும் அப்லோட் செய்ய வேண்டும் இறுதியாக விவரங்கள் அப்டேட் ஆகிவிடும்.

Read Previous

TVS Motor நிறுவனத்தில் Diploma / Degree முடித்தவர்களுக்கு வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்..!!

Read Next

சர்க்கரை நோயால் அவதிப்படுகிறீர்களா..? இந்த ஒரு விதையை பத்து நாள் எடுத்தால் போதும் சர்க்கரை நோய் பறந்து விடும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular