• September 24, 2023

ஆதார் அப்டேட் பண்ணலையா.? ரேஷன் பொருட்களுக்கு ஆபத்து..!! உடனே பண்ணுங்க.!!

இந்திய நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு கட்டாயம் என்பது தற்போது இருந்து வருகிறது. இது மிக முக்கியமான அடையாள ஆவணமாக இருந்து வருகிறது.

எனவே நாம் பயன்படுத்தக்கூடிய அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளிலும் ஆதார் அட்டை இணைத்து இருக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. அரசின் சலுகைகளை பெற 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்களின் வசதிக்காக ஆதார் அட்டையில் புகைப்படம் மற்றும் முகவரி உள்ளிட்டவற்றை புதுப்பிக்க வரும் டிசம்பர் 14ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதற்கான அவகாசம் செப்டம்பர் 14 என்று வரை குறிப்பிட்டு இருந்தது.

ஆதார் அட்டையை புதுப்பித்தால் மட்டுமே தான் ரேசன் பொருட்கள் கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. தற்பொழுது வரை ஆதார் அட்டை புதுப்பிக்காமல் இருக்கும் நபர்கள் உடனடியாக ஆதார் மையங்கள் மூலமாகவோ அல்லது வீட்டில் இருந்து மை ஆதார் என்ற போர்ட்டல் மூலமாகவோ அப்டேட் செய்து கொள்ளலாம். அப்படி அப்டேட் செய்யாமல் டிசம்பர் 14ஆம் தேதி வரை இருந்தால் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Read Previous

பரபரப்பு வீடியோ… அரசு அதிகாரியின் காரை அடித்து நொறுக்கிய பள்ளி மாணவிகள்..!! மாணவிகள் மீது காவல்துறை தாக்குதல்.!!

Read Next

பால் பாக்கி தராததால் 3 பேர் சுட்டுக்கொலை…. ஒருவர் படுகாயம்..!! கொலையாளிகளை தீவிரமாக தேடி வரும் காவல்துறை.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular