ஆதார் கார்டில் இதை 2 முறை மட்டுமே மாற்ற முடியும்.. தெரிஞ்சுக்கோங்க..!!
உங்கள் வாழ்நாள் முழுவதும் 2 முறை ஆதார் அட்டையில் உங்கள் பெயரை மாற்றிக்கொள்ளலாம். பாலினத்தை வாழ்நாளில் ஒருமுறை மாற்றிக் கொள்ளலாம். உங்கள் பிறந்த தேதியை ஒருமுறை புதுப்பிக்கலாம். பெயர் மற்றும் பிறந்த தேதி போலன்றி, உங்கள் ஆதார் அட்டையில் உங்கள் முகவரியைப் புதுப்பிப்பதற்கு வரம்பு இல்லை. ஏனெனில் சிலர் வாடகை வீடுகளில் வசிப்பார்கள். இதுபோன்ற நபர்கள் வீடு மாறும் போது முகவரியும் மாறக்கூடும் என்பதால் முகவரி மாற்றத்திற்கான வரம்பு எதுவும் இல்லை.