ஆத்மா என்பது என்ன!

ஆத்மா என்பது நமது மனித உடலில் உள்ள மின்சாரம் போன்று இயங்கும் ஒரு ஒளியின் வடிவம்.. அதாவது ஒரு கார் இயக்கும் போது எப்படி காரின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் ஒரு ஓட்டுனரின் பிடியில் உள்ளதோ அது போன்று நமது உடலின் ஒட்டுமொத்த செயல்பாடும் நமது ஆத்மாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.”அவனின்றி அணுவும் அசையாது என்றால் ,ஆத்மா இன்றி உடலும் இயங்காது”.

நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலையும் ஒவ்வொரு கணமும் நமது ஆத்மா நம்மை விழிப்புணர்வுடன் கவனித்துக் கொண்டிருக்கிறது . நாம் இப்பிறவியல் மேற்கொள்ளும் நல்லது கெட்டது போன்ற செயல்பாடுகளின் விளைவே கர்மா என்னும் கருத்தாகும்.

இதனையே புத்தர், மகாவீரர் போன்ற ஞானிகள் கர்மா என்பதை ஏற்றுக் கொண்டார்கள். கர்மாவில் இருந்து விடுபட தியானம் பெரிதும் உதவும் என்கிறார் புத்தர்.. இதனையே தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்து மதத்தில் மறுபிறவி உள்ளதாக நம்பப்படுகிறது.. மறுபிறவி எடுப்பதற்கான காரணம் நல்லது கெட்டது என்ற செயல்களின் விளைவான கர்மாவே ஆகும் ..

 

 

 

Read Previous

கடவுள் என்ற சொல்லின் விளக்கம்

Read Next

ஓஷோவின் மருத்துவத்தில் இருந்து மனமற்ற நிலை வரை பார்வை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular